’2025 எனக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது’ - பூஜா ஹெக்டே
இந்த ஆண்டு பூஜா ஹெக்டேவை பிஸியான நடிகையாக மாற்றி இருக்கிறது.;
சென்னை,
பூஜா ஹெக்டேவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகள் சுமாராக இருந்தன. கடந்த ஆண்டு அவருடைய ஒரு படம் கூட வெளியாகவில்லை. 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ஒரு படம் மட்டுமே வெளியானது. அதுவும் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.
இருப்பினும், 2025 அவருக்கு ஒரு கம்பேக் ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் சூர்யாவுடன் "ரெட்ரோ" படத்தில் நடித்தார். அந்த படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், ரஜினிகாந்தின் "கூலி" படத்தில் அவர் நட்னமாடிய மோனிகா பாடல் அருக்கு புகழை சேர்த்தது.
பூஜா ஹெக்டே நடிப்பில் அடுத்ததாக ஜனவரி 9-ம் தேதி “ஜன நாயகன்” வெளியாக இருக்கிறது. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் ஒரு தெலுங்கு படம் உட்பட இன்னும் இரண்டு படங்கள் அவர் கையில் உள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு அவரை பிஸியான நடிகையாக மாற்றி இருக்கிறது.
இந்நிலையில், ஒரு பேட்டியில் 2025-ம் ஆண்டு தனக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்ததாக பூஜா ஹெக்டே கூறினார். அவர் கூறுகையில்,
"படங்கள் ரீதியாக இது மிகவும் திருப்திகரமான ஆண்டாக அமைந்தது. 'ரெட்ரோ' படத்தில் எனது கதாபாத்திரத்திற்காக கிடைத்த வரவேற்பும் அன்பும் இதற்கு காரணம். 'மோனிகா' பாடல் அதற்கு மேலும் வலு சேர்த்தது’’ என்றார்.