'தக் லைப்' படத்திற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் - கமல் எடுத்த அதிரடி முடிவு

தமிழில் இருந்து பிறந்ததே கன்னட மொழி என்று கமல்ஹாசன் பேசியதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.;

Update:2025-06-02 14:57 IST

சென்னை,

கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன் கோர்ட்டை நாடி இருக்கிறார். கன்னடம் , தமிழிலிருந்து உருவானது என்று அவர் கூறியதற்கு எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்தை வெளியிட தடை விதித்தது.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் மட்டும் தொடங்கவில்லை.

முன்னதாக நடந்த 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து பிறந்ததே கன்னட மொழி என்று கமல்ஹாசன் பேசி இருந்த நிலையில், கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கடந்த 31-ம் தேதி "தக் லைப்" படத்திற்கு தடை விதிப்பதாக தெரிவித்தது.

இந்நிலையில், கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் தாக்கல் செய்த இந்த மனுவில், கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய கோரியும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்