'அது என்னுடைய கனவு படம்...'- சூர்யாவுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

சூர்யா-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ';

Update:2025-05-06 07:18 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் , சூர்யாவுன் இன்னொரு படம் பண்ண உள்ளதாக உறுதியளித்துள்ளார். அவர் கூறுகையில்,

'சூர்யா சாருடன் இன்னொரு படம் கண்டிப்பாக பண்ணுவேன். அது என்னுடைய கனவு படம், பெரிய பட்ஜெட், நிறைய நேரம் தேவை. சூர்யா சார், என் கமிட்மென்ட்ஸ் எல்லாம் இருப்பதால் எப்போது துவங்கும் என்று எனக்குத் தெரியவில்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்