கவினின் “மாஸ்க்” படத்தின் 3வது பாடல் வெளியீடு

கவின், ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மாஸ்க்’ படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-11-15 18:44 IST

அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் ‘மாஸ்க்’ படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

Advertising
Advertising

இந்த நிலையில், ‘மாஸ்க்’ படத்தின் 3வது பாடல் வெளியாகி உள்ளது. ‘கேஷ் கேஷ்’ எனத்துவங்கும் இப்பாடலை கபேர் வாசுகி வரிகளில் சுரேஷ் பீட்டர்ஸ், கருணாஸ், கபேர் வாசுகி ஆகியோர் பாடியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்