கவினின் ‘மாஸ்க்’ பட டிரெய்லர் வெளியானது
இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘மாஸ்க்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் ‘மாஸ்க்’ படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.