ராஜமவுலி படத்தில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா!

ராஜமவுலி இயக்கிவரும் படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.;

Update:2025-11-13 12:34 IST

சென்னை,

எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக "எஸ்எஸ்எம்பி 29" என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

அண்மையில் இந்தப் படத்தின் வில்லன் பிருத்விராஜின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் கும்பா என்ற  கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். அதனை தொடர்ந்து தற்போது பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மஞ்சள் நிற புடவையில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இப்படத்தில் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் வருகிற 15-ம் தேதி நடைபெறுகிறது. அதில் இப்படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்