மொழித் தடை...5 படங்களை இழந்த பிரபல நடிகர்
திரைப்பட பின்னணி உள்ளவர்கள் கூட ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆடிசன்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சுமந்த் கூறினார்.;
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் சுமந்தின் சமீபத்திய வெப் படமான ''அனகனகா'' பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மகேஷ் பாபு உட்பட பலரை பிரமிக்க வைத்தது.
காஜல் சவுத்ரி மற்றும் விஹார்ஷ் ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ''அனகனகா'' இடிவி வின் தளத்தில் அதிக பார்வைகளை கடந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில், சுமந்தும் 'அனகனகா'' இயக்குனர் சன்னி சஞ்சயும் ரசிகர்களுடன் ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது சுமந்த் பேசுகையில், "திரைப்பட பின்னணி உள்ளவர்கள் கூட ஒரு கட்டத்திற்குப் பிறகு ஆடிசன்களில் கலந்து கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு முன்புதான், நான் நான்கு முதல் ஐந்து இந்தி பட ஆடிசனில் கலந்துகொண்டேன்.
எனக்கு இந்தி அவ்வளவு தெரியாததால் நிராகரிக்கப்பட்டேன். மொழித் தடையால் அந்த வாய்ப்புகளை இழந்தேன்'' என்றார்.