இன்ஸ்டா, யூடியூப்போல டிஸ்னி+ ஓடிடி தளத்திலும் ரீல்ஸ்
குறுகிய நேர வீடியோக்களையும் பயனர்கள் காணும் வகையில் வீடியோ கிளிப்புகளை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
டிஸ்னி+ ஓடிடி தளத்தில் ரீல்ஸ் வடிவ வீடியோக்கள் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் மட்டுமன்றி, யூடியூப், இன்ஸ்டாகிராம் போல குறுகிய நேர வீடியோக்களையும் பயனர்கள் காணும் வகையில் வீடியோ கிளிப்புகளை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களை அதிகம் ஈர்க்கும் நோக்கில், பிரபல திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் முக்கிய காட்சிகளை குறுகிய வீடியோக்களாக வழங்க இந்த புதிய அம்சம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.