’காதல் மிகவும் தூய்மையானது, ஆத்மார்த்தமானது’ - பாக்யஸ்ரீ போர்ஸ்
பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது ஆந்திரா கிங் தாலுகா படத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
துல்கர் சல்மானின் காந்தா படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தற்போது ராம் பொதினேனிக்கு ஜோடியாக ஆந்திரா கிங் தாலுகா படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணலில், பாக்யஸ்ரீ போர்ஸ், ஆந்திரா கிங் தாலுகா பற்றி மனம் திறந்து பேசினார். படத்தில் வரும் காதல் கதை மிகவும் தூய்மையானது மற்றும் ஆத்மார்த்தமானது என்று கூறினார். மேலும், காதலில் உள்ளதுபோல ஆழமான, அழகான உணர்வு இந்தப் படத்திலும் உள்ளது என்றும் தெரிவித்தார்.
மகேஷ் பாபு பி இயக்கி உள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில், இந்த படம் வருகிற 27-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.