"மாரீசன்" சமூக விழிப்புணர்வு படம் - வடிவேலு

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள ‘மாரீசன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.;

Update:2025-07-25 14:33 IST

சென்னை,

வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'மாமன்னன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து 'மாரீசன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 'மாரீசன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் வடிவேலு, "மாரீசன் என்கிற பெயரே வித்தியாசமாக இருந்தது. இயக்குநரிடம், கதைக்கும் தலைப்புக்குமான காரணம் என்ன எனக் கேட்டபோது, ராமாயணத்துக்கும் இப்படத்தின் கதைக்குமான தொடர்பைக் குறித்துச் சொன்னது நன்றாக இருந்தது. மாமன்னனுக்குப் பிறகு பகத் பாசிலுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்ததுடன், அவர் என்னுடைய ரசிகர் என்பது கூடுதல் மனநிறைவைக் கொடுக்கிறது. மாரீசன் திரைப்படம் சமூக விழிப்புணர்வைப் பேசுகிறது. இன்றைய கால இளைஞர்களுக்கான படம் என்பதைத் தாண்டி அனைவரும் மாரீசனை ஏற்றுக்கொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்