ஜாய் கிரிசில்டா குறித்து மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவியின் இன்ஸ்டா போஸ்ட்!

தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஆதரவாக ஸ்ருதி கருத்து தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-27 11:33 IST

சென்னை,

பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே, ஆடை வடிவமைப்புக் கலைஞர் ஜாய் கிரிசில்டாவை சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது ஜாய்கிரிசில்டா நிறைமாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஜாய்கிரிசில்டா தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு வருகிறது. இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா மாறி மாறி தங்களின் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டு உள்ளார்கள். இப்படி இருக்கையில் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக பதிவிட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது, "என் மீது பலரும் கரிசணம் காட்டுவதைப் பார்த்தால் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று நினைக்கத் தோன்றுகிறது. நானும் எனது குழந்தையும் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம் என்று தெரியாமல் பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் என்னுடைய அறிவு முதிர்ச்சி, அனைத்திற்கும் மரியாதையுடன் பதில் அளிக்க கற்றுக் கொடுத்துள்ளது. எல்லா குடும்பத்திற்கும் உள்ளிருந்தும் வெளியிருந்தும் பிரச்சினைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஒன்றாக இணைந்தே எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவர வேண்டும், ஒற்றுமையே பலம்.

வெளியில் இருந்து யாராவது வந்து சித்து விளையாட்டுகளை விளையாடி, சட்டப்படி மனைவியாக இருக்கும் உங்களை வெளியேற்றும் போது ஒரு போதும் விட்டுத்தராதீர்கள், துவண்டு போவாதீர்கள். உங்கள் கணவருக்காக போராடும் அனைத்து மனைவிகளுக்கும் என் ஆதரவு எப்போதும் உண்டு. என்று தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஆதரவாக ஸ்ருதி கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்