'ஆர்ஆர்ஆர்' இசை நிகழ்ச்சி - ஒரே மேடையில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், மகேஷ் பாபு

லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.;

Update:2025-05-11 15:17 IST

லண்டன்,

இன்று இரவு லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கும் வகையில், மகேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மூன்று டோலிவுட் நடிகர்களையும் ஒரே மேடையில் பார்க்க உள்ளதால் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் எஸ்.எஸ்.எம்.பி 29 படத்தின் படப்பிடிப்பு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்