"மம்முட்டியா, மோகன்லாலா?" - மாளவிகா மோகனனின் சுவாரசிய பதில்

மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.;

Update:2025-05-25 10:53 IST

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான இளம் நடிகைகளில் ஒருவரான மாளவிகா மோகனன், சமீபத்தில் ரசிகர்களுடனான கேள்வி பதில் உரையாடலில் மம்முட்டி, மோகன்லால் குறித்த ஒரு கேள்விக்கு சுவாரசியமான பதிலை கூறினார்.

மாளவிகா மோகனன் தற்போது தமிழில் கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2', மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஹிருதயப்பூர்வம்' மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அவரிடம் "மம்முட்டியா அல்லது மோகன்லாலா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மாளவிகா மோகனன், "அவர்களில் ஒருவர் என்னை சினிமா உலகிற்குள் அறிமுகப்படுத்தியவர், மற்றொருவருடன் நான் ஒரு அழகான படத்தில் நடித்திருக்கிறேன், அதனால் இது கொஞ்சம் நியாயமற்ற கேள்வி, இல்லையா?' என்று பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்