"வைப் இருக்கு பேபி"...கவனத்தை ஈர்க்கும் ''மிராய்'' படத்தின் முதல் பாடல்
முதல் பாடலான "வைப் இருக்கு பேபி" பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது.;
சென்னை,
''அனுமான்'' நடிகர் தேஜா சஜ்ஜாவின் புதிய திரைப்படமான மிராய், தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் இணையத்தில் கவனம் பெற்றது.
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் ரித்திகா நாயக் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம், தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான "வைப் இருக்கு பேபி" பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது.
ஒத்திவைப்பு வதந்திகளுக்கு மத்தியில், படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 5-ம் தேதி பல மொழிகளில் வெளியாகும் என்று குழு தெளிவுப்படுத்தியுள்ளது.