துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்' படத்தில் இணைந்த கயாடு லோஹர்

சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் ‘ஐ அம் கேம்’ படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.;

Update:2025-12-18 13:24 IST

சென்னை,

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் சமீபத்தில் காந்தா படம் வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது, ‘ஐ அம் கேம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சண்டை இயக்குனராக அன்பறிவு, மேலும் நடிகர்களான கதிர், ஆண்டனி வர்கீஸ் பிபி ஆகியோர் நடிக்கிறார்கள்.

நடிகர் துல்கர் சல்மானின் 'வே பாரர்' நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து. இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் பிரபல நடிகையான காயடு லோஹர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்