மிருணாள் தாகூரின் "டகோயிட்" பட டீசர் வெளியானது
இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் தற்போது ஷானெல் தியோ இயக்கத்தில் "டகோயிட்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் அதிவி சேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். எஸ்.எஸ்.சி கிரியேஷன்ஸ், அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. ஆக்சன் காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசர் கவனத்தை ஈர்த்துள்ளது.