வெற்றி மாறனின் "பேட் கேர்ள்" படத்தின் 'நான் தனி பிழை' பாடல் வெளியீடு

வெற்றி மாறனின் ‘பேட் கேர்ள்’ படம் வருகிற செப்டம்பர் 5ந் தேதி வெளியாகிறது.;

Update:2025-07-17 21:05 IST

சென்னை,

காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'.

இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் திரிவேதி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. கோவாவில் நடைபெற்ற 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தின் முதல் பாடலான "பிளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடல் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடலான 'நான் தனி பிழை' வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்