லோகேஷ் கனகராஜ் படங்களின் வெற்றி ரகசியம் பகிர்ந்த நாகார்ஜுனா

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களின் வெற்றிக்கு காரணம் அவரது தனித்துவமான கதாபாத்திரங்கள்தான் என நாகார்ஜுனா கூறியுள்ளார்.;

Update:2025-06-13 14:25 IST

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நாகார்ஜுனா'கூலி' திரைப்படத்தில் அவருடைய கதாப்பாத்திரத்தை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் " லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களைப் பாருங்கள் அனைத்திலும் சிறப்பான கதாபாத்திரங்கள். விக்ரம் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் பகத் பாசில், விஜய் சேதுபதி எல்லாமே நன்றாக இருந்தன. விக்ரம் படத்தில் வரும் டீனா கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. இந்தமாதிரி சுவாரசியமான கதாபாத்திரங்கள்தான் அவரது வெற்றியின் ரகசியமாக இருக்கிறது. 'கூலி' படத்தில் ரஜினியைத் தவிர்த்து பார்த்தாலுமே உபேந்திரா, அமீர்கான், என்னுடைய கதாபாத்திரங்கள் தனியாக நிற்கும் அளவுக்கு இருக்கின்றன" என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்