’ஜன நாயகன்’ - ரீமேக் வதந்திகளுக்கு பதிலளித்த ’பகவந்த் கேசரி’ பட இயக்குனர்

’பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி, ஜன நாயகன் தனது படத்தின் ரீமேக் என்ற வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.;

Update:2025-12-31 07:01 IST

சென்னை,

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’-ஐ எச். வினோத் இயக்கியுள்ளார். இதில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, நரேன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதற்கிடையில், இந்தப் படம் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ’பகவந்த் கேசரி’ (2023) படத்தின் ரீமேக் என்று வதந்தி பரவி பருகிறது. இந்நிலையில்,நந்தமுரி பாலகிருஷ்ணா , ஸ்ரீலீலா மற்றும் காஜல் அகர்வால் நடித்த ’பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி, ஜன நாயகன் தனது படத்தின் ரீமேக் என்ற வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.

அவர் பேசுகையில், ’‘ஜன நாயகன்’ தளபதி விஜய்யின் படம். நான் விஜய் சாரை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். விஜய் சார் ஒரு உண்மையான ஜென்டில்மேன். ஜன நாயகன் படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா? இல்லையா? என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்