'என்சி 24' - நாக சைதன்யா, மீனாட்சி சவுத்ரியின் கதாபாத்திரம் இதுவா?
'தண்டேல்' படத்தின் வெற்றிக்கு பின்னர், தனது 24-வது படத்தில் நாக சைதன்யா நடித்து வருகிறார்.;
சென்னை,
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாக சைதன்யா, 'தண்டேல்' படத்தின் வெற்றிக்கு பின்னர், தனது 24-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'என்சி 24' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கார்த்திக் தண்டு இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் புஷ்பா பட இயக்குனரின் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரிகின்றன.
இப்படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிப்பதாக தெரிகிறது. புராணக்கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.
இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் மீனாட்சி சவுத்ரியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, நாக சைதன்யா ஒரு புதையல் வேட்டைக்காரனாகவும், மீனாட்சி சவுத்ரி தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.