“பராசக்தி” படம் வெளியாக 100 நாட்கள் உள்ள நிலையில் புதிய போஸ்டர் வெளியீடு

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.;

Update:2025-10-06 23:42 IST

சென்னை,

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் கூறப்படுவதால் ‘பராசக்தி’ திட்டமிட்டபடி திரைக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையில் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோத உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

படம் வெளியாக இன்னும் 100 நாள்களே உள்ள நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்திலிருந்து புது போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்