சம்யுக்தா மேனனின் 'சுயம்பு' தாமதமாவது ஏன்? - படக்குழு பதில்

இப்படத்தில் சம்யுக்தா மேனன் மற்றும் நபா நடேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.;

Update:2025-10-26 06:24 IST

சென்னை,

சுயம்பு திரைப்படம் தாமதமாகி வருவது குறித்து வெளியான செய்திகளுக்கு நடிகர் நிகில் சித்தார்த்தா பதிலளித்துள்ளார்.

நிகில் தனது சமூக ஊடகங்களில் ஒரு அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதில் "புகழுக்கு பொறுமை தேவை" என்று பதிவிட்டார்.

மேலும் அவர் "எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் உற்சாகமான மற்றும் அறிவூட்டக்கூடிய பயணமாக இருந்த ஒரு படம். அசாதாரணமான ஒன்று உருவாகும்போது பொறுமை முக்கியம் என்பதை இது எனக்குக் கற்றுக் கொடுத்தது"என்று தெரிவித்திருக்கிறார்.

பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நிகில், சம்யுக்தா மேனன் மற்றும் நபா நடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் செய்திகள்