'இப்போ பையன்கள் பொண்ணுங்களைப் பாத்து பயப்படுகிறார்கள்' - நடிகை ஹேமா
காஸ்டிங் கவுச் பற்றி நடிகை ஹேமா பேசினார்.;
சென்னை,
சமீபத்தில், நடிகை ஹேமா காஸ்டிங் கவுச் பற்றிப் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். நேர்காணல் ஒன்றில் அவர் இதை பற்றி பேசினார். அவர் கூறுகையில்,
’அது பழைய விஷயம். அந்தக் காலம் போய்விட்டது. இப்போ பையன்களுக்குப் பொண்ணுங்களைப் பாத்து பயம். சமீபத்தில் ஹீரோயிடம் இதை பற்றி ஒரு நிருபர் கேட்டப்போ நான் எதையும் எதிர்கொண்டதில்லைன்னு சொன்னாங்க. இன்னொரு ஹீரோயினும் அதையே சொன்னாங்க.
இப்போதைய தலைமுறை வேறு. அப்போதைய தலைமுறை வேறு. இப்போது காஸ்டிங் கவுச் இல்லை. நான் அப்படி எதையும் எதிர்கொண்டதில்லை. யாராவது என்கிட்ட அப்படிப் பேசினால், நான் லெப்ட், ரைட் வாங்கிடுவேன்’ என்றார்.