இணையத்தில் விமர்சனத்திற்குள்ளான சமந்தாவின் முன்னாள் ஒப்பனை கலைஞர்
சமந்தாவின் முன்னாள் ஒப்பனை கலைஞர் சாதனா சிங் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவு சர்ச்சையை கிளப்பியது.;
சென்னை,
சமந்தா இயக்குனர் ராஜ் நிதிமோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, சமந்தாவின் முன்னாள் ஒப்பனை கலைஞர் சாதனா சிங் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவு சர்ச்சையைக் கிளப்பியது.
தனது திருமணத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே, சாதனா சமந்தாவை மறைமுகமாக "வில்லன்" என்று சித்தரித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவு சமந்தாவின் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்தது. இதனால் சாதனா இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறார்.
தன்னை இணையத்தில் விமர்சித்தவர்களின் பதிவை அவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில் சமந்தாவின் நெருங்கிய தோழியாகவும், நீண்டகால ஒப்பனை கலைஞராகவும் இருந்தவர் சாதனா சிங் என்பது குறிப்பிடத்தக்கது.