கெனிசாவுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன்.;
சென்னை,
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிசா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிசா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசன பாதையில் ஏழுமலையானை வழிபட்டுள்ளனர்.