இணையத்தில் வைரலாகும் பகத் பாசிலின் புகைப்படம்

புதிய தோற்றத்தில் இருக்கும் பகத் பாசிலின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Update: 2024-05-26 04:43 GMT

திருவனந்தபுரம்,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் 'ஆவேஷம்'. இப்படத்தை ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பகத்தின் நடிப்பால் வெற்றிப்படமானது. ரூ.150 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

சமீபத்தில் பகத் பாசிலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், பகத் பாசிலின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், வயநாட்டில் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற பகத் பாசில் ரசிகர்களைச் சந்தித்தார். இது குறித்தான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். இதில் பகத் புதிய தோற்றத்தில் இருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்