'சோழர்கள், பாண்டியர்கள் பற்றி ஒரே ஒரு பாடப்பகுதி...இதை தீர்மானித்தது யார் ?' - மாதவன் கேள்வி

முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மாதவன் பேசியுள்ளார்.;

Update:2025-05-04 11:02 IST

சென்னை,

என்.சி.இ.ஆர்.டி. புத்தகத்தில் முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மாதவன் பேசியுள்ளார். அவர் கூறுகையில்,

"ஆங்கிலேயர்களும், முகலாயர்களும் நம்மை சுமார் 800 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர், ஆனால் சோழப் பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது.

நான் பள்ளியில் படித்தபோது, பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி 4 பாடங்கள் இருந்தன, ஆனால் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றி ஒரே ஒரு பாடப் பகுதி மட்டுமே இருந்தது. இந்த பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது?.

கொரியாவில் உள்ள பாதி மக்கள் தமிழ் பேசுகிறார்கள், ஏனென்றால் எங்கள் மொழி அவ்வளவு தூரம் சென்றது. இதையெல்லாம் ஒரே ஒரு பாடப்பகுதியில் சுருக்கிவிட்டார்கள். இதைச் சொல்வதால் எனக்குப் பிரச்சினை வரலாம், ஆனாலும் நான் அதை சொல்வேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்