கிங்டம் படம் திரையிட எதிர்ப்பு; தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்...!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகின திரைப்படம் கிங்டம்.;

Update:2025-08-05 13:04 IST

 

டைரக்டர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகின திரைப்படம் கிங்டம். இத்திரைப்படம் கடந்த 31ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் இலங்கை தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்து காட்சிகள் உள்ளதாகவும் தமிழ் கடவுளான முருகன் பெயரை வில்லனுக்கு சூட்டி இருப்பதாகவும் நாதவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனால் கிங்டம் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தி தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் கிங்டம் திரையிட நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்