நடிகர் அபினவின் புதிய படம்...பூஜையுடன் துவக்கம்

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.;

Update:2025-12-21 10:55 IST

சென்னை,

பல குழந்தை நட்சத்திரங்கள் ஹீரோக்களாகவும், ஹீரோயின்களாகவும் அறிமுகமாகிறார்கள். இந்நிலையில், தெலுங்கில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அபினவ் மணிகண்டா, இப்போது ஒரு புதிய படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார்.

ராஜேஷ் கடம் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பூஜா யாதம் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

அஞ்சனிபுத்ரா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 'போம்மா ஹிட்' என பெயரிடப்பட்டுள்ளது. படத்தை அடுத்த கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் ராஜேஷ் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்