’நலமாக இருக்கிறேன்’- கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை விளக்கம்
குடிபோதையில் ஒருவர் வேகமாக வந்து நடிகையின் கார் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.;
சென்னை,
பாலிவுட் நடிகையான நோரா பதேஹி கார் விபத்தில் இருந்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மும்பையில் பிரபல அமெரிக்க டிஜே டேவிட் குட்டாவின் 'சன்பர்ன்' இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
குடிபோதையில் ஒருவர் வேகமாக வந்து நோராவின் கார் மீது மோதிய விபத்தில் நோராவுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்திய போதிலும், இரவு சன்பர்ன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்நிலையில், நோரா சமீபத்தில் சமூக ஊடகங்களில் இந்த விஷயத்திற்கு பதிலளித்து, தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்தார். விபத்து எப்படி நடந்தது என்பதையும் அவர் விளக்கினார்.