நெதர்லாந்தில் `பராசக்தி' படத்தின் திரையிடல்கள் ரத்து

ஜனநாயகன் படத்தை போலவே, ‘பராசக்தி’ படத்துக்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.;

Update:2026-01-09 08:38 IST

2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடித்திருப்பதால் இப்படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பராசக்தி’ படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஜனநாயகன் படத்தை போலவே, ‘பராசக்தி’ படத்துக்கும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

‘பராசக்தி’ படத்திற்கு மொத்தம் 23 கட்கள் சொல்லி உள்ளதாகவும், குறிப்பாக இந்தி திணிப்பு எதிர்ப்பு காட்சிகளை நீக்கவோ, அல்லது அதில் உள்ள வசனங்களை மாற்றவோ பரிந்துரை செய்துள்ளனர். இதனால் ‘பராசக்தி’ படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டில் ‛பராசக்தி' திரைப்படம் நாளை (10ம் தேதி) வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ‛சென்சார்' சான்று கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் உள்ள நிலையில் நெதர்லாந்தில் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு 10 நாட்களில் அதற்கான பணம் மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்