கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்
கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.;
தமிழ் சினிமாவில் 'புத்தம் புது பூவே' என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன். இதுவரை 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர்.
இந்த நிலையில், கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். அவரது தந்தை இறந்தது குறித்து, சினேகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நட்புக்குறிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் / அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம். எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்கு காலமாகி விட்டார் என்ற துயர தகவலை தெரிவித்து கொள்கிறேன்.
நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது." என்று பதிவிட்டுள்ளார்.