பிரபாஸின் 'தி ராஜா சாப்' பட டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.;

Update:2025-09-28 10:49 IST

சென்னை,

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று ''தி ராஜா சாப்''. மாருதி இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்களை தவிர படத்தில் சஞ்சய் தத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமன் இசையமைக்கிறார். இந்த பான்-இந்திய திரைப்படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாக உள்ளது.

படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும்நிலையில், தற்போது ''தி ராஜா சாப் படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்