தீபாவளிக்கு திரைக்கு வருகிறது பிரதீப் ரங்கநாதனின் "எல்.ஐ.கே" படம்
பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான "எல்.ஐ.கே" படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளன.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் செப்டம்பர் 18ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற அக்டோபர் மாதம் 17ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.