பிரீத்தி முகுந்தனின் முதல் மலையாள படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை பிரீத்தி முகுந்தன் 'மைனே பியார் கியா' என்ற படத்தின் மூலம் முதல் முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.;

Update:2025-07-25 11:33 IST

சென்னை,

கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'ஓம் பீம் புஷ்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரீத்தி முகுந்தன். அதனைத்தொடர்ந்து, கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர், சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'ஆச கூட' ஆல்பம் பாடலில் நடனமாடி மேலும் புகழ் அடைந்த இவர் தற்போது மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார்.

இவர் தற்போது 'மைனே பியார் கியா' என்ற படத்தின் மூலம் முதல் முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில், கதாநாயகனாக சமீபத்தில் வெளியான திரில்லர் படமான 'முரா' படத்தில் நடித்திருந்த ஹிருது ஹாரூண் நடிக்கிறார். பைசல் பாசிலுதீன் இயக்கும் இப்படத்தில், அனார்கலி மரிக்கார் மற்றும் அல்தாப் சலீம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், மைனே பியார் கியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஆகஸ்ட் 29 ந் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த பதிவினை நடிகை பிரீத்தி முகுந்தன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்