திரையுலகில் சோகம்...பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்
சுமார் 30 ஆண்டுகளாக திரையுலகில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜஸ்விந்தர் பல்லா.;
மும்பை,
பஞ்சாபி திரையுலகைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகரான ஜஸ்விந்தர் பல்லா(65) காலமானார். மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், இன்று அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை அவரது உடலுக்கான இறுதி சடங்கு நடைபெறும் என தெரிகிறது. சுமார் 30 ஆண்டுகளாக திரையுலகில் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்ற ஜஸ்விந்தர் பல்லாவின் திடீர் மரணம் பஞ்சாபி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் பல்லாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
துல்ஹா பட்டி, ஜாட் அண்ட் ஜூலியட், சர்தார் ஜி மற்றும் கேரி ஆன் ஜட்டா போன்ற மிகப்பெரிய பஞ்சாபி வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ஷிண்டா ஷிண்டா நோ பாப்பா படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.