பூரி ஜெகநாத் - விஜய் சேதுபதி கூட்டணி: டைட்டில் டீசர் எப்போது?.. வெளியான தகவல்

பூரி ஜெகநாத் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் படத்தினை நடிகை சார்மி கவுர் தயாரித்து வருகிறார்.;

Update:2025-09-26 11:24 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் விடுதலை 2 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரான பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடித்து வருகிறார். பான் இந்திய அளவில் தயாராக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு,சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வருகிற 28ந் தேதி இவர்களது கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்