'ராஜு வெட்ஸ் ராம்பாய்' நான் சிறுவயதில் கேட்ட கதை - இயக்குனர் சாய்லு

இந்தப் படம் வருகிற 21 ஆம் தேதி வெளியாகிறது.;

Update:2025-11-16 21:31 IST

சென்னை,

’ராஜு வெட்ஸ் ராம்பாய்’ படத்தில் அகில் உத்தேமரி மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சாய்லு இயக்கும் இப்படத்தை இடிவி வின் ஒரிஜினல்ஸ், டோலாமுகி சபால்டர்ன் பிலிம்ஸ் மற்றும் மான்சூன் டேல்ஸ் ஆகியவற்றின் கீழ் வேணு உடுகுலா மற்றும் ராகுல் மோபிதேவி தயாரிக்கின்றனர்.

தான் காதலிக்கும் பையனுக்கும் தனது குடும்பத்திற்கும் இடையில் சிக்கித் தலிக்கும் ஒரு பெண்ணின் கதை. இந்தப் படம் வருகிற 21 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இந்த படத்தை பற்றி இயக்குனர் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில்,

'நான் குழந்தையாக இருந்தபோது நடந்த ஒரு உண்மை சம்பவம். அதை அடிப்படையாகக் கொண்டுதான் 'ராஜு வெட்ஸ் ராம்பாய்' கதையை எழுதினேன். இது கவுரவக் கொலையை பற்றிய கதை அல்ல, ஆனால் அது போன்ற ஒன்று " என்று இயக்குனர் சைலு காம்படி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்