தெருநாய்கள் விவகாரம் - பிரபலங்களை கடுமையாக சாடிய இயக்குனர் ராம் கோபால் வர்மா
தெரு நாய்கள் விவகாரத்தில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சென்னை,
டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் உள்ள 10 லட்சம் தெரு நாய்களை பிடித்து கருத்தடை ஊசி போட்டு, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தெரு நாய்கள் விவகாரத்தில் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சதா, ஜான்வி கபூர், சோனாக்சி சின்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா பிரபலங்களை கடுமையாக சாடி இருக்கிறார். தெருநாய்களால் குழந்தைகள் தாக்கப்பட்டு கொல்லப்படும்போது அமைதியாக இருக்கும் நாய் பிரியர்கள்,கோர்ட்டு உத்தரவு குறித்து கொந்தளிப்பது ஏன் என்று கோபால் வர்மா கேள்வி எழுப்பினார்
"மக்கள் இறந்தால் அது பாவமில்லை, ஆனால் நீங்க நாய்களுக்காக கண்ணீர் வடிக்கிறீங்களா?" என்று கூறினார். அதே நேரத்தில், "விலங்கு பிரியர்களுக்கு இவைதான் என் அறிவுரை" என்று 12 அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.