ரிஷப் ஷெட்டிபோல் நடிப்பு....கிளம்பிய சர்ச்சை - மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

ரிஷப் ஷெட்டிபோல் முக பாவனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், அதற்கு ரன்வீர் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார்.;

Update:2025-12-02 13:59 IST

சென்னை,

சமீபத்தில் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ரிஷப் ஷெட்டி, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மேடையில் தோன்றி பேசிய நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா திரைப்படத்தில் வரும் ‘தெய்வா' கடவுளை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும், ரிஷப் ஷெட்டிபோல் முக பாவனைகளை செய்து காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதற்கு ரன்வீர் சிங் மன்னிப்புக்கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

"ரிஷப்பின் அற்புதமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கம். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நமது நாட்டின் ஒவ்வொரு கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையையும் நான் எப்போதும் மதிக்கிறேன். யாருடைய மனதையும் நான் புண்படுத்தியிருந்தால், மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்