“மாயபிம்பம்” படத்தை பாராட்டி, இயக்குநருக்கு வாய்ப்பு வழங்கிய பிரபல தயாரிப்பாளர்

‘மாயபிம்பம்’ படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படத்தின் இயக்குநரை அழைத்து அடுத்த படத்தை தனது தயாரிப்பில் இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார்.;

Update:2026-01-23 16:45 IST

கே.ஜே.சுரேந்தர் இயக்கத்தில் உருவான ‘மாயபிம்பம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. புதுமுக நடிகர்களை வைத்து இயக்கியுள்ள இந்தப் படம் . 2005 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்தப் படம் கமர்ஷியல் பேமிலி எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது.

சமீபத்தில் ‘மாயபிம்பம்’ படம் பார்த்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநரின் நேர்மையான முயற்சியையும், குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் கதையை அணுகிய விதத்தையும் பாராட்டியுள்ளார். புதிய இயக்குநர், முற்றிலும் புது முகங்களை வைத்துக்கொண்டு எளிமையான ஆனால் தாக்கம் கொண்ட கதையை சொல்லியுள்ளார் என பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு படக்குழுவின் உழைப்பிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக அமைந்தது. அத்துடன் இயக்குநரின் திறமையை பாராட்டியதுடன், அவருக்கு உடனடியாக புதிய பட வாய்ப்பை வழங்கியுள்ளார். விரைவில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மாயபிம்பம்’ பட இயக்குநர் இயக்கும் புதிய படத்தின் படப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்