சதீஷ் நினாசம் நடிக்கும் “தி ரைஸ் ஆப் அசோகா” படத்தின் அப்டேட்

‘தி ரைஸ் ஆப் அசோகா’ படத்தில் காந்தாரா நடிகை சப்தமி கவுடா கதாநாயகியாக நடித்துள்ளார்.;

Update:2026-01-23 21:33 IST

சதீஷ் நினாசம் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘தி ரைஸ் ஆப் அசோகா’ . இந்தப் படத்தில் காந்தார நடிகை சப்தமி கவுடா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் சதீஷின் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படமாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் பி சுரேஷ், ரவிசங்கர், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, சம்பத் மைத்ரேயா, யாஷ் ஷெட்டி, டிராகன் மஞ்சு, மற்றும் விக்ரம் வேதா-புகழ் ஹரிஷ் பேரடி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் முன்பு அசோகா பிளேட் என்று அழைக்கப்பட்டது , ஆனால் இயக்குனர் வினோத் தொண்டேலின் மறைவுக்குப் பிறகு படம் நிறுத்தப்பட்டது. நடிகர் சதீஷ் நினாசம் பின்னர் அதை ‘தி ரைஸ் ஆப் அசோகா’ என்ற புதிய தலைப்பில் மீண்டும் உயிர்ப்பித்தார். விருத்தி கிரியேஷன்ஸ் மற்றும் சதீஷ் பிக்சர்ஸ் ஹவுஸ் தயாரித்த இந்த படத்தின் கதையை தயானந்த் டி.கே எழுதியுள்ளார். 

இத்திரைப்படம்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விரைவில் தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, தயாரிப்பாளர் வர்தன் ஹரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

நடிகை சப்தமி கௌடா பேசுகையில், “இந்த திரைப்படத்தில் அம்பிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.‌ 90களில் உள்ள பெண்ணாக நடித்திருக்கிறேன். அவளுக்கென்று தனியாக ஒரு கனவு இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. அதற்காக அவள் எப்படி போராடுகிறார்? என்பதுதான் உச்சகட்ட காட்சி. இது எனக்கு மிகவும் பிடித்தமானது. இது எனக்கு மட்டுமல்ல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்