நெல்லையில்'மங்காத்தா' படத்துக்கு பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்..!

அஜித்குமாரின் மங்காத்தா திரைப்படம் இன்று மீண்டும் ரீ-ரிலீசாகி உள்ளது.;

Update:2026-01-23 16:39 IST

நெல்லை,

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வெளியான 'மங்காத்தா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அஜித்குமாரின் 50-வது படமான மங்காத்தா 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் ரீ-ரிலீசாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் வளாகத்தில் அஜித்குமார் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், டி.ஜே. ஒலித்து நடனமாடியும் கொண்டாடினார்கள். அப்போது, அரசியல் வேண்டாம் ரசிகராகவே இருக்கிறோம் என்ற வாசகத்துடன் அஜித்குமார் படம் பொறித்த கொடியை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

மேலும், 'மங்காத்தா' படத்தின் மறுவெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்து விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் நெல்லை வடக்கு மாவட்டம் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனருக்கு அஜித்குமார் ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்