ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் கார்த்தி
கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’ படம் வருகிற 12ம் தேதி வெளியாகிறது.;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.மேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் வருகிற 12ம் தேதி திரைக்கு வருகிறது
இந்நிலையில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடிகர் கார்த்தி சாமி தரிசனம் செய்தார்.