25வது நாளை கடந்து வெற்றி நடைபோடும் ரியோவின் “ஆண்பாவம் பொல்லாதது”

ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.;

Update:2025-11-25 16:23 IST

ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியிருந்தார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டது ஏஜிஸ் நிறுவனம். மாளவிகா மனோஜ், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், இயக்குநர் வெங்கடேஷ், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து இவர் நடித்திருக்கும் படம்தான் ‘ஆண்பாவம் பொல்லாதது’. ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியானது. இப்படம் வெளியான தினத்தில் இருந்து நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. 

இந்நிலையில், இப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளது. ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது ‘ஆண்பாவம் பொல்லாதது’. தமிழக வசூலில் இதுவரை ஒட்டுமொத்த வசூலில் ரூ 21 கோடியை கடந்திருக்கிறது. குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இந்த வசூல் படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் இப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமத்தை முன்னதாகவே படக்குழு விற்றுவிட்டது.

2025-ம் ஆண்டில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய படங்கள் பட்டியலில் கண்டிப்பாக ‘ஆண்பாவம் பொல்லாதது’ இடம்பெறும். ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்கு வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்