ஆர்.டி76: படப்பிடிப்பைத் தொடங்கிய ரவி தேஜா

இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிப்பதாக கூறப்படுகிறது.;

Update:2025-06-18 06:28 IST

ஐதராபாத்,

ரவி தேஜா, தனது 76வது படமான தற்காலிகமாக ஆர்.டி76 என பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளார்.

ஐதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ள இதில், ரவி தேஜா மற்றும் முக்கிய நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. "சித்ரலஹரி" மற்றும் "நேனு சைலஜா" போன்ற படங்களை இயக்கி பெயர் பெற்ற கிஷோர் திருமலா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடிப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, கெட்டிகா சர்மா மற்றும் ஆஷிகா ரங்கநாத் போன்ற பெயர்கள் பரவி வரும் நிலையில், படக்குழுவினர் இன்னும் முழு நடிகர்கள் குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்