தனக்கு பிடித்த 10 விஷயங்கள்...பட்டியலிட்ட நடிகை ருக்மிணி வசந்த்
தனக்கு மிகவும் பிடித்த 10 விஷயங்களை ருக்மிணி வசந்த் பட்டியலிட்டுள்ளார்.;
சென்னை,
தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் நடிகை ருக்மிணி வசந்த் தற்போது நாடு முழுவது பிரபலமடைந்துள்ளார். "நேஷனல் கிரஷ்" என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். "காந்தாரா: சாப்டர்1" படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இன்ஸ்டாகிராமில் அதிகளவில் சுறுசுறுப்பாகி வருகிறார். இது அவரது ரசிகர் பட்டாளத்தை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இந்நிலையில், தனக்கு மிகவும் பிடித்த 10 விஷயங்களை ருக்மிணி வசந்த் பட்டியலிட்டுள்ளார். அந்த பட்டியல் இதோ:1. புத்தகங்கள்(Books) 2. வண்ணமயமான உணவு(A colorful plate) 3. பூக்கள்(Flowers) 4. சூரிய அஸ்தமனம்(Sunsets) 5. கடல்(Sea) 6. காற்றில் ஆடும் இலைகள் (A breeze in the trees) 7. குதிரை சவாரி(Horse Riding) 8. வேலை(Work) 9. ஐஸ்கிரீம்(Icecream) 10. இயற்கையோடு நடைப்பயணம்(Nature walks)
ருக்மிணி வசந்த் தற்போது “டாக்ஸிக்” படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. மேலும், பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் வதந்தி பரவியுள்ளது.