திரைத்துறையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்த யோகி பாபு நெகிழ்ச்சி பதிவு

எனக்கு ஊக்கம் அளிக்கும் ஊடக நண்பர்கள் - எனது மகிழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று யோகி பாபு பதிவிட்டுள்ளார்.;

Update:2025-11-28 05:28 IST

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.

கடந்த 2009ம் ஆண்டு அமீர் நடிப்பில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கலகலப்பு (2012), மான் கராத்தே (2014) போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் புகழ் பெற்றார். அதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், ஜெயிலர், கடைசி விவசாயி, மெர்சல், மாஸ்டர் மற்றும் மாவீரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.

இந்த நிலையில், திரைத்துறையில் அறிமுகமாகி 16 ஆண்டுகளை நிறைவு செய்யும் யோகி பாபு தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அமீர் அண்ணன் நடிப்பில், திரு.சுப்ரமணியம் சிவா அண்ணன் அவர்கள் இயக்கத்தில் உருவான "யோகி" திரைப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகின்றது. அமீர் அண்ணன் மற்றும் சுப்ரமணியம் சிவா அண்ணன் இருவருக்கும் என்றும் கடமைப்பட்டு உள்ளேன். நான் வெற்றிகரமாக இயங்கி வர முக்கியமான வேர்களான இயக்குநர்கள் மற்றும் எனது தயாரிப்பாளர்கள் - திரைத் துறையில் அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் நண்பர்கள். எனக்கு ஊக்கம் அளிக்கும் ஊடக நண்பர்கள் - எனது மகிழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி . உங்கள் கலைஞன் - நகைச்சுவை நடிகன்

யோகி பாபு" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்