"டாக்ஸிக்'' பட அப்டேட் கொடுத்த ருக்மிணி வசந்த்

“டாக்ஸிக்’’படம் அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;

Update:2025-11-07 14:29 IST

சென்னை,

"காந்தாரா: சாப்டர் 1" படத்தின் வெற்றியின் மூலம் ருக்மிணி வசந்த் நாடு முழுவதும் பிரபலமடைந்திருக்கிறார். இப்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் யாஷின் டாக்ஸிக்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய ருக்மிணி வசந்த் இந்த படத்தில் நடிப்பது குறித்து தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், “நாம் இதுவரை கன்னடம் அல்லது இந்திய சினிமாவில் பார்த்த எதையும் போலல்லாமல் டாக்ஸிக் வித்தியாசமானது’ என்றார். ருக்மணி வசந்த் கொடுத்த இந்த அப்டேட் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.

கே.வி.என் புரொடக்சன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரித்த “டாக்ஸிக்’’படம் அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்