‘ஜஸ்டிஸ் பார் ஜெனி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

‘ஜஸ்டிஸ் பார் ஜெனி’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-12-17 08:29 IST

அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜஸ்டிஸ் பார் ஜெனி’. இதில் ஆஷிகா அசோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா, சாண்ட்ரா அனில் , சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பேராடி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தினை அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கவுதம் வின்சென்ட் இசையமைத்துள்ளார்.

இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் ஜனரில் உருவாகியுள்ள ‘ஜஸ்டிஸ் பார் ஜெனி’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்